2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விட்ட காலத்தைப் பிடிக்க முடியாது

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

விட்ட காலத்தைப் பிடிக்க முடியாது. இருக்கும் காலத்தைத் தொலைக்கலாகாது. காலப் பெருவெளியில் எமது பணிகள், அமைந்தாலே எங்கள் சுவடுகள் பிறருக்குப் புலனாகும்.

ஒன்றுமே செய்யாத மாந்தர்களின் அடையாளம் என்று எதுவுமே இல்லை. ஆனால் எவருக்கும் தீமை செய்திடாமல் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் மக்களினால் மெச்சப்படுகின்றார்கள். 

கடிக்காத பாம்பைக்கூட அடித்து வேடிக்கை பார்ப்பதுண்டு. நல்லவர்களுக்கும் பொல்லாங்கு செய்யும் பேர்வழிகள், குரூரமாகத் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். இறைவன் சாபத்தையே கோர்த்துக் கொள்வார்கள். 

காலம் நல்லது செய்பவர்களையும் பொல்லாததை இஷ்டத்துடன் செய்பவர்களின் ஜாதகங்களையும் குறித்துக்கொள்ளும். வாழும் காலத்தைக் கேவலமாக்கும் நபர்களை இது தண்டனை வழங்கிவிடும். காலத்துக்கு உருவம் கிடையாது. இது செய்யும் சாதனைகளோ பெரிது, பெரிது.

 

வாழ்வியல் தரிசனம் 22/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .