Princiya Dixci / 2017 மார்ச் 22 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) ரஷ்யாவுக்குப் பயணமானார்.
1974ஆம் ஆண்டில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தின் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
ரஷ்ய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயர் மரியாதையுடன் வரவேற்பதற்கு ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .