2024 மே 02, வியாழக்கிழமை

‘தண்டனை இன்மை தொடர்கிறது’

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் முக்கியமான சம்பவங்களைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்தி, அச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படாமை இலங்கையில் தொடர்ந்துகொண்டே செல்கின்றது” என, சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.  

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி ஐந்து மாணவர்கள் மாதம், கொல்லப்பட்டமை, அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம், எக்ஷன் பாம் (பட்டினிக்கு எதிரான இயக்கம்) ஐச் சேர்ந்த மனிதாபிமான ஊழியர்கள் 17பேர் கொலை அடங்கலான,  

உதாரணங்களாகிப் போன சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தண்டனையின்மை தொடர்வதாக, அச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.  

இதேவேளை, ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து தொழிற்படுதலில் இலங்கையின் ஒத்துழைப்பை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான தனது அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை பாராட்டியுள்ளது. 

2015ஆம் ஆண்டிலிருந்து விசேட செயல்முறைக்கு நிலையான அழைப்பை விடுத்துள்ளது. 2015இல், வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பான செயற்குழு இங்கு வந்தது.  

உண்மையை அறிதல், நீதி, பிராயச்சித்தம், மீள இவ்வாறு நடக்காமையை உறுதிப்படுத்தல், ஆகியவை தொடர்பில், விசேட அறிக்கையாளர்கள் மதிப்பாய்வு செய்ய இங்குவர வசதி செய்யும்படி, அது கூறியுள்ளது’ என, மன்னிப்புச் சபை தெரிவித்தது. 

இலங்கை, மட்டுமட்டான அளவிலேயே முன்னேற்றம் கண்டுள்ளது எனக் கூறியுள்ள அச்சபை, 30/1 தீர்மானத்தை அமுல் செய்யும் கடப்பாட்டிலும் உண்மையை அறிவதற்கான பொறிமுறையிலும் யுத்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராயச்சித்தம் போன்ற விடயங்களில், அதிகம் சாதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

“இந்தப் பொறிமுறைகளை அமைக்கும் செயற்பாட்டின் போது, பொது மக்கள் ஆலோசனைக்கு அரசாங்கம் வழங்கிய ஆதரவு மிகக் குறைவு. முக்கிய வழக்குகளில் தண்டனையின்மை இன்னும் தொடர்கிறது.  

திருகோணமலை மாணவர்கள் கொலை, மூதூர் 17 ஊழியர்கள் கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடையோர் தண்டிக்கப்படவில்லை. 

பொறுப்புக் கூறுதலில் சுயாதீனம், நம்பகம், பக்கச்சார்பின்மை உறுதிசெய்ய சர்வதேச பங்குபற்றுதலை ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வலியுறுத்துவதை சர்வதேச மன்னிப்புச்சபை வரவேற்கிறது” என்றும் அச்சபைகூறியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .