2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மனித உரிமை அறிக்கை சரியானது அல்ல'

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு நாடு தொடர்பிலும் முன்வைக்கப்படுகின்ற மனித உரிமைகள் குறித்த அறிக்கையானது முழுமையானதும் சரியானதும் அல்ல என்பதை பேரவை அறிந்திருக்கும் என்று வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீதான விவாதம் நேற்று (22) இடம்பெற்றது அதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

    வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட பல வெற்றிகள் தொடர்பில் கவனம் செலுத்தி அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக மனித உரிமைகள் ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். 

இந்த பேரவையில் கடந்த 28ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 30/1 யோசனையின் பிரகாரம் மற்றும் அதற்கு அப்பால் செய்யவேண்டியவை, முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் மற்றும் அவற்றுக்கான முகங்கொடுக்கின்ற சவால்கள் உள்ளிட்டவை தொடர்பில தெளிவுபடுத்தினார். 

விசேடமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில் எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. இந்த விவகாரத்தில், தொடர்ச்சியாக தைரியமாக நாங்கள் செயற்படுகின்றோம். சமூக பொருளாதாரத்தை மற்றொரு படிக்கு கொண்டுசெல்வதற்கு எங்களுடைய தேசியத்தை பாதுகாப்பதற்காக சமாதானமாக செயற்படுகின்ற ஐக்கிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எங்களுடைய பிரதான நோக்கமாகும்.  

31/1 யோசனைக்கு இலங்கை, இணை அனுசரணையாளராக செயற்படுகின்றது என்பதனை பெரும் விருப்பத்துடன் தெரிவித்துகொள்கின்றோம். இந்த யோசனையை முன்னெடுப்பதற்கு எங்களுக்கு 2 ஆண்டுகாலம் காலஅவகாசம் வழங்கப்பட்டமைக்காக, இந்தப் பேரவைக்கும், இணை அனுசரனையாளர்களுக்கும் நன்றிக்கூறிக்கொள்கின்றோம். 

சகல அறிக்கைகளையும் நன்றாக ஆராய்வோம், கருத்துகளை, தகவல்களை மற்றும் விமர்சனங்களை பரிமாறிக்கொள்வோம் அதனூடாக மனித உரிமைகளை பாதுகாத்து, சட்டஆட்சிக்கு உட்பட்ட நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் கூறினார். 

அச்சுத்தல் மற்றும் பயமுறுத்தல்களுக்கு இடமளிக்காது சுதந்திர ஜனநாயக்க நாட்டுக்குள் சகல பிரஜைகளும் சமாதானமாக வாழ்வதற்கும் சம அந்தஸ்து கொடுத்து அவற்றை பாதுகாப்பதற்கான எங்களுடைய நோக்கத்தை மாற்றமின்றி வைத்து செயற்படுவோம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .