2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

யாழ். வருகிறார் ரஜினி

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.  

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X