2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹிந்த

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ருபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 16ஆம் திகதி, பாரிய இலஞ்ச ஊழலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினம், தன்னால் ஆஜராக முடியாது என்றும்  ஆஜராக முடியாமைக்காக காரணத்தை தெரிவித்து, தமது சட்டத்தரணிகள் ஊடாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் (24) முற்பகல் 10 மணிக்கு, ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜராக வேண்டும் என ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .