2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கு முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு சலுகைகள்

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு இரட்டிப்பு சலுகைகளும் இதர வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான அறிவித்தலை பிரதமர் வெகுவிரைவில் விடுப்பார் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.

தமது யாழ்ப்பாண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அமைச்சர் தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்புகளையும் தான் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளருடன் தங்கியிருந்த பழைய ஞாபகங்களையும் நினைவுபடுத்தியுள்ளார்.

2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் கண்காட்சி நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழுக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பது நல்ல விடயம். இச் தேசிய செயற் திட்டத்தில் வெற்றி பெற வேண்டும். யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க கூடியவர்கள்.

எனது தந்தையார் பதில் அரச அதிபராக யாழில் கடமையாற்றினார். அவ் வேளைகளில் நாங்கள் இங்கே வருவோம். அதன் போது பல இடங்களிற்கும் சென்றிருக்கின்றோம். குறிப்பாக நண்பர்களுடன் வரும் போது கீரிமலையில் நீராடியிருக்கிறோம். இவ்வாறு யாழ். மக்களுடன் பல தொடர்புகள் எனக்கும் இருக்கின்றது. குறிப்பாக நல்லதோர் விருந்துபசாரத்தையும் விருந்தோம்பல் பண்பைக் கொண்டவர்கள யாழ்ப்பாண மக்கள். எங்களுக்கும் அத்தகைய விருந்தோம்பல்களை வழங்கினார்கள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் களிநொச்சியில் அமைந்திருந்த சமாதான யெலகத்திற்கு வந்து புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனைச் சந்தித்திருந்தேன். அங்கு சிங்க ரால் உட்பட பல்வேறு உணவுகளையும் பரிமாறியிருந்தனர். அவர்களிடமும் அத்தகைய விருந்தோம்பல்களை கண்டிருந்தேன்.

அத்தகைய கஸ்டமான காலத்திலும் தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்மை பராட்ட விரும்புகிறேன். சமாதன செயலகம் கிளிநnhச்சியில் இருந்தது. அங்கு ஒரு நாள் இரவைக் கழிக்கும் படி புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னைக் கேட்டிருந்தார். நானும் இருந்த போது தான் எவ்வளவு மிகக் கடுமையான சூழல் அங்கு இருந்தது என்பதை உணர்ந்தேன். குறிப்பாக மின்சாரம் கூட இல்லை. ஆனால் இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எமக்கு இங்குள்ள பிரச்சனை நன்றாக தெரிகிறது. இடம்பெயரந்த மக்கள் மீள்குடியேற்ற வேண்டும். அவர்களுக்கு உட்கட்டமைப்பு செய்து கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்கால நன்மை கருதி நீர் மின்சாரம் உள்ளிடட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.

இவற்றைச் செய்தற்கு இதற்கான வழிமுறைகளும் நிதியுதவிகளும் அவசியம். புலம்பெயர் தமிழ் மக்களையும் அழைக்க வேண்டும். அவர்களிடமும் நாங்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரம் பல செயற்திட்டங்களை வடபகுதியில் அமுல்ப்படுத்துவதற்காக இந்திய அரசுடன் செயலாற்றி வருகின்றோம். அடுத்த மாதம் 26 ஆம் திகதி பிரதமர் இந்தியாவிற்கு விஐயம் செய்வார். அதன் போது வடக்கில் செய்யயுவுள்ள செயற்திட்டங்களிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்.

கடந்த கால அரசியலில் இருந்த பாரிய கடன் தொகையை சமகால அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிதி நெருக்கடிகளிலிருந்த விடுபடுவதற்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு இந்த கடன்தொகையை எடுத்துச் செல்லக் கூடாது. அடுத்த வரும் சில வருடங்களுக்கு முன்னர் இதனை முடித்தக் கொள்ள வேண்டும்.

அதற்கு நாட்டிலுள்ள அனைத்த பிரiஐகளின் ஒத்துழைப்பும் அவசியம். யுத்த சூழ்நிலை முடிவடைந்திருக்கின்ற நிலை ஒருவருக்கொருவர் உதவி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டும். குறிப்பாக வடமாகாணத்தில் செய்யப்படுகின்ற முதலீடுகளுக்கு இரட்டிப்பான சலுகைகளும் ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படும். என்று அறிவிப்பை வெகு விரைவில் பிரதமர் விடுவிக்க உள்ளார்.

இதன் மூலமாக யாழ் உட்பட வடக்கில் பல தொழிற்சாலைகளை அமைக்க முடியும். பின்னர் வேலைவாய்ப்பு பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என்பது எமது நம்பிக்கை. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கிளை அலுவலகம், முதலீட்டுச் சபையின் அலுவலகம், கைத்தொழிற்பேட்டையின் கிளை அலுவலகம் என்பன அங்கே திறக்கப்படும்.  இதனூடாக நாங்கள் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும். அனைவரதும் ஒத்துழைப்பு வேண்டும். இதனூடாக சிறந்த பெறுபேரு கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .