2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணாமல்போன ‘இலங்கையர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்’

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலைவாய்ப்பு நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்று காணாமல்போயுள்ள இலங்கையர்கள் அறுவர் தொடர்பில், தற்போது விசார​ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடக பேச்சாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையிலிருந்து சவூதிக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பிலேயே, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், குறித்த நபர்களின் உறவினர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே, குறித்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனையைச் சேர்ந்த எம்.எச்.ரிப்னாஸ், ரத்கபுரவைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.சுஜஹன், கிரியுல்லவைச் சேர்ந்த பி.ஜி.காமனி, அதிமலே பகுதியைச் சேர்ந்த கே.பி.கே.சந்திரவதி, கல்லடியைச் சேர்ந்த என்.எப்.ரீடா மற்றும் கலேன்பிந்துவெவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரியாஷ் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் சவூதியில் பணிபுரிபவர்கள் தகவல் வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்தவகையில், 011 4379328 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு, தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .