2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மகளிர் அமைப்பை சிறந்த அமைப்பாக மாற்றிக் காட்டுவேன்'

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'மலையகப் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெளிவாக விளங்கிக் கொண்டு அதற்கு எதிராகக் குரல் கொடுக்க தயங்கக் கூடாது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பை, எதிர்காலத்தில் சிறந்த ஓர் அமைப்பாக மாற்றியமைத்து எமது மகளிருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்' என, மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளரும் சட்டதரணியுமான அனுஷா தர்சினி சந்திரசேகரன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதன் ஆலய மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

'பெண்களின் உரிமைகளை பெண்களே பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த உரிமைகளை வெற்றிக் கொள்வதற்கு எம்மிடம் ஒற்றுமை அவசியம். எமது பெண்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இன்று தமது வாழ்வை கொண்டு செல்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய  பிரச்சினைகளை வெளியில் சொல்வதில்லை.

எனது தந்தையார் கூறியது போல சோதனைகள் எமது பாதையை தாமதப்படுத்தலாம். ஆனால், சாதனைகள் சரித்திரம் படைக்க வேண்டும். எனவே,  நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மலையக பெண்களது உரிமைகளை பெற்றுக்கொடுக்க, நான் என்றும் அவர்களுக்கு துணையாக இருந்து செயல்படுவேன்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .