2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'யார் அடிக்கல் நாட்டினாலும் இ.தொ.கா தான் கொண்டுவந்தது'

Kogilavani   / 2017 மார்ச் 26 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
“இன்று, ஆட்சி மாற்றம் காரணமாக பல்வேறு நபர்கள், அடிக்கல் நாட்டினாலும் அந்த அபிவிருத்தி யாவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுவந்த அபிவிருத்தி தான்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்டச் சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று, கொட்டகலை தொண்டமான் தொழில்நுட்பப் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில், நேற்று (26)  நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்திய அரசாங்கத்திடம், 23 தடவைகள் பேசித் தான், 4,000 வீடுகளைப் பெற்றுக்கொண்டோம். அதற்கு இன்று, ஏனையவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள்.

“எனவே, மலையகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், இலங்கை காங்கிரஸினால் கொண்டுவரப்பட்டது.

“ஆகவே, கடந்த காலங்களில் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து செயப்பட்டதன் மூலம் தான், எங்களுக்கு பாரிய அபிவிருத்தியினை மேற்கொள்ள முடிந்தது. எனவே, சகலவற்றினையும் தீர்மானிப்பது உங்கள் சக்தி தான்.  நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்களுக்குத் தேவையான அத்தனையும் பெற முடியும்” என்று, அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ், முன்னாள் கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .