2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது Huawei

Gavitha   / 2017 மார்ச் 27 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 நிறைவில் இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற திறன்பேசி வர்த்தகநாமமாக Huawei தெரிவாகியுள்ளதென Huawei அறிவித்துள்ளது. உலகளாவில் திறன்பேசி சந்தையில் தனது வர்த்தகநாமத்தின் தனித்துவத்தின் உந்துசக்தியுடன் அது வளர்ச்சி கண்டுவருகின்றது.

2017ஆம் ஆண்டில் உலகிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் தொடர்பில் (Global 500), Brand Finance வெளியிட்டுள்ள பட்டியலில், 40ஆவது ஸ்தானத்துக்கு Huawei முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை மக்கள் மத்தியில் நற்பெயரை வென்றெடுத்துள்ள சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் பங்குடமையொன்றை Huawei ஏற்படுத்தியிருந்தது. 2012ஆம் ஆண்டில் தனது தொழிற்பாடுகளை முதன்முதலாக ஆரம்பித்த Huawei வர்த்தகநாமமானது, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வழிகாட்டலுடன் தனது வர்த்தகநாமத்தின் நற்பெயரை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியுள்ளது. பயனர் அனுபவம் தொடர்பான ஆராய்ச்சி நிபுணத்துவ அமைப்பான GfK வெளியிட்டுள்ள சமீபத்தைய ஆய்வறிக்கையில், 2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், 30%இற்கும் அதிகமான சந்தைப்பங்கினை Huawei கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில், “2012 ஆம் ஆண்டில் இலங்கையில் திறன்பேசிச்சந்தையில் கால்பதித்திருந்த Huawe, நாட்டில் எமது பிரத்தியேகமான விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடனான திறன்மிக்க பங்குடமையின் துணையுடன், பெரு வளர்ச்சிக் கண்டுள்ளது. நாட்டில் தனது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், புத்தாக்கம் மிக்க, புரட்சிகரமான, சிக்கனமான மற்றும் நம்பகமான திறன்பேசி வர்த்தகநாமங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தி, உள்நாட்டில் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை வெகு விரைவாக தன்பால் ஈர்த்துக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்கவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ள நிலையில், Huawei இனை இந்த மட்டத்துக்கு வளர்ச்சி காண்பதற்கு சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆற்றியுள்ள பங்களிப்புக்களை நாம் போற்றுகின்றோம். 2017ஆம் ஆண்டில் இந்த நாட்டில் முதலிடத்தில் திகழுகின்ற வர்த்தகநாமமாக மாறவேண்டும் என்ற பயணத்தை ஆரம்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .