2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.மேல் நீதிமன்றில் முக்கொலை சாட்சியம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“முக்கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து இரத்த படிவுகள், தலைமுடி, நைலோன் கயிறு என்பவற்றை மீட்டேன்” என,  யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜெயம், சாட்சியம் அளித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை, செவ்வாய்க்கிழமை (28) மதியம், யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது இடம்பெற்ற சாட்சி பதிவின் போது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்து கூறுகையில், “கொலை சம்பவமானது 2014.05.04 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருந்தது. நான் சென்று சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்டிருந்த உடலில் இருந்து வந்த இரத்த படிவுகளையும், இரண்டு இடங்களில் காணப்பட்ட தலைமுடிகளையும் வீட்டின் முற்றத்தில் இருந்த நைலோன் கயிற்றையும் சேகரித்து தடயப்பொருட்களாக இணைத்திருந்தேன்.

அதன் பின்னர், அச்சுவேலி பொலிஸார் ஊடாக பிரேத பரிசோதனை நடவடிக்கையின் போதும், புலன் விசாரனையின் போது கைப்பற்றப்பட்ட கத்தியின் இருந்த இரத்த கறையுடனும், இறந்தவரின் உடலில் இருந்த இரத்த மாதிரியுடனும், அந்த தடயப் பொருட்களை  ஆய்வு செய்வதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியிருந்தேன்.

இதன்பின்னர், குறித்த தடயப் பொருட்களை ஜின்டெக் நிறுவனத்திற்கு வழங்க மல்லாகம் நீதவான் நீதிமன்றானது கட்டளை பிறப்பித்திருந்தது” என சாட்சியமளித்திருந்தார்.

இவரை தொடர்ந்து இவ் வழக்கின் 09 சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த சாட்சியான தடயவியல் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் சேனவிரட்ண ராஜபக்ஷ சாட்சியமளிக்கையில்,

“2014.05.05 ஆம் திகதி குறித்த குற்றச் செயல் தொடர்பாக கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியை சோதனை செய்து வருமாறு எனது பிரிவு (சோக்கோ) பொறுப்பதிகாரியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அதனை பரிசோதிக்க சென்றேன்.

நான் சோதனை செய்ய சென்ற முச்சக்கரவண்டி அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இருந்த வாகன திருத்தகத்தில் (கறாச்சில்) கறுப்பு துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் நிறம் வெள்ளை” என சாட்சியமளித்ததுடன், வழங்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .