2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

7 மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்கள்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

ஐரோப்பிய ஒன்றிய உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இலங்கையில் 7 மாவட்டங்களில் 60 பில்லியன் யூரோ நாணயம் அபிவிருத்தித் திட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஜுனியனின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் வருண தர்மரெத்தின தெரிவித்தார்.

மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டம், யுனிசெப்,  திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு,  உலக வங்கியின் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகிய அமைப்புகள் இத்திட்டத்துக்கான நிதி உதவியை வழங்கி வருகின்றன.

2014ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது இவ்வாண்டு நவம்பருடன்; நிறைவடையவுள்ளது எனவும் அவர் கூறினார்.

அபிவிருத்தி ஊடகவியல் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை அம்பாறை மொன்டி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் இலகுவில் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு உதவியளித்தல், உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல், உள்ளூர் ஆளுகை கட்டமைப்புக்கு வலுச்சேர்த்தல் ஆகிய  மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 50 ஆயிரம் மக்களுக்கு வாழ்வாதார உதவி அளித்தல், ஒரு இலட்சம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், 20 ஆயிரம் பேருக்கு தொழில்நுட்பவியல் பயிற்சி வழங்குதல், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதியைப் பெற்றுக்கொடுத்தல், 4,800 பேருக்கு தொழில் தகைமை சான்றிதழ் பெற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .