2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புத்தகயா யாத்திரை; 10 நிறுவனங்களின் பதிவுகள் இ​ரத்து

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தகயாவுக்கு யாத்திரை ஏற்பாடுகளைச் செய்யும் 10 நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச் ​செய்யப்பட்டுள்ளதாக, புத்தசாசன அமைச்சுத் தெரிவித்துள்ளது.

யாத்திரிகர்களுக்கு எந்தவிதமான வசதிகளையும் பெற்றுக்கொடுக்காமை மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழே, இந்த நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

புத்தகயாவுக்கு யாத்திரை சென்ற மூவர், திடீரென மரணம் அடைந்தனர். அவர்களுக்கான யாத்திரைப் பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனமும், இதற்குள் உள்ளடங்குவதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இ​தேவேளை, புத்தகயா யாத்திரைப் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு 246 நிறுவனங்கள், அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்ட 6 பேர், இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக, புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த வருடத்தில் புத்தகயாவுக்கு யாத்திரை சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 46,000க்கும் அதிகமாகும் என்பதுடன், 2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16,000க்கும் அதிகமானவர்கள் அங்கு சென்றுள்ளனர் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, புத்தகயாவுக்கு யாத்திரைப் பயண ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிகளை உருவாக்கவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .