2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வெளிநாடு போவதற்கு அனுமதி தாருங்கள்’

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடு செல்வதற்குத் தனக்கு அனுமதியளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) கோரி நின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, போலியான ஆவணங்களைத் தயாரித்து ஊடகங்களுக்கு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவருடைய கடவுச்சீட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்றை தாக்கல் செய்த திஸ்ஸ அத்தநாயக்க, அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தன்னுடைய மகளிடம் நலன் விசாரிப்பதற்காக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்குமாறே கோரியுள்ளார்.  

இந்நிலையில், அந்த நகர்வு மனுவை, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம், திகதி குறித்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .