2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நாட்டைப் பிரிக்காது அதிகாரத்தை பகிர வேண்டும்’

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தைப் பகிர ​வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

“அத்துடன், மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதிகரிக்குமாறு வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட ஏனைய முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனரே தவிர, நாட்டைப் பிரிப்பது அவசியம் என அவர்கள் யாரும் கூறவில்லை” என்று, பிரதமர் குறிப்பிட்டார். 

மருதானையிலுள்ள விகாரையொன்றில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மதமாக பௌத்த மதம் காணப்படுகின்றது. அது தொடர்பில் யாரும் வாதம் புரிவது கிடையாது. 

அதனைப்போல, பௌத்த மதத்துக்குக் கொடுக்க ​வேண்டிய முன்னுரிமை தொடர்பில் யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. புத்த பகவானின் ​போதனையின்படி, ஏனைய மதங்களுக்கு நாங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும். அவற்றைக் கடைபிடிக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுக்க ​வேண்டும்.

  தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ​போது, நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தைப் பிரிப்பது எவ்வாறு என்று நாம் சிந்தித்துப் பார்க்க ​வேண்டும். 

நாட்டைப் பிரிக்குமாறு யாரும் கூறப்போவது இல்லை. ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக அதிகாரத்தை பிரித்து, ஒவ்வொரு பிரதேசத்தில் இருக்கும் மக்கள், தமது வேலைகளைச் செய்துகொள்வதற்கும் தமது மதத்தை கடைபிடிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட ​வேண்டும். 

மாகாண சபை அதிகாரங்களை அதிகரிப்பது ​தொடர்பான பிரேரணை வடக்கு மாகாண முதலமைச்சரால் மட்டுமல்ல, தெற்கு முதலமைச்சராலும் அவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் யாரும் நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை” என, பிரதமர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .