2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘படைவீரரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாரில்லை’

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் பிரேரணைகளில் இந்த நாட்டின் எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தான் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளைப் படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாய்நாட்டுக்காகப் போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகுமென தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தான் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார். 

இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.  

இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் படையினர் தொடர்பில் எழும் சிக்கலான நிலமைகளின் போது நேரடியாக இலங்கையுடன் இருப்பதாக உலகின் பலமிக்க அரச தலைவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

போர் இடம்பெற்ற காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தான் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்தத் தரத்திலிருந்தாலும்  அவரைப் பாதுகாக்கும் இயலுமை தனக்கு இல்லையென்றும் ஜனாதிபதி கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .