2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

விமலின் உண்ணாவிரதம் பெரும் தலையிடியாம்

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.  

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எக்காரணத்தை கொண்டு நிறைவுக்கு கொண்டுவருவது என்பது தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மந்திராலோசனை செய்துவருவதாகவும் அறியமுடிகின்றது.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல், விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துவிட்டார்.  

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கவேண்டிய உரிமையை தனக்கும் வழங்குமாறு கோரி, தனக்கு பிணை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துவிட்டார்.  

உண்ணாவிரதத்தை கைவிடக்கோரும் ஆவணமொன்றில், முன்னணி தேரர்களிடம் கையெழுத்தை பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் கைகூடவில்லை.  

முன்னணி தேரர்கள் பலர், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு மறுத்துவிட்டனர் என்றும் அறியமுடிகின்றது.  

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள, விமல் வீரவன்சவை, பௌத்த தேரர்கள் சிலர், இன்று வியாழக்கிழமை காலை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X