Thipaan / 2017 மார்ச் 31 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஸன்
தந்தை செல்வாவின் 119 ஆவது ஜனன தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு முன்னால் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில், இன்று (31) நடைபெற்றன.
தந்தை செல்வாவில் உருவச்சிலைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மலர் மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன் மலர் மாலை அணிவித்தார்.
இதன் பின்னர் தந்தை செல்வாவின் சமாதிக்கு மாவை சேனாதிராசா உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள்; அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும் கட்சி ஆதரவாளர்கள்; பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மன்னார் - எஸ்.றொசேரியன் லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .