Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பங்களாதேஷில் இடம்பெறும் 136ஆவது அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் அமர்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்குப் பயணமாகியுள்ளனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான் காதர், மஹ்றூப் அப்துல்லாஹ், குமாரி விஜயரத்ன றோஹினி மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரே இவ்வாறு பயணித்துள்ளனர்.
உலகின் 180 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள், கடந்த 01ஆம் திகதி தொடக்கம் நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை இடம்பெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்த அமர்வில் பங்கு பற்றுவதற்குத் தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை, இலங்கையின் சிறுபான்மை மக்களின் பாதிப்புகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதன் அவசியம் பற்றி பிரஸ்தாபிக்கவுள்ளதாக, சதாசிவம் வியாழேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .