Gavitha / 2017 ஏப்ரல் 03 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதியைத் திறப்பதற்கு முயன்றபோது, மாகாண சபையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரே, முதலாவதாக எதிர்ப்பினை வெளியிட்டார். அவருக்கு இருக்கும் உணர்வு கூட, பௌத்தர்களுக்கு இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமலஜோதி தேரரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொட்டாஞ்சேனையில் உள்ள விஹாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பௌத்தம் தொடர்பான புத்தகங்கள், ஒருகாலத்தில் தேடிக்கொள்ள முடியாத நிலைமையே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில், விமலஜோதி தேரர் தலையிட்டு, பாரிய செயற்பாடுகளில் ஈடுபட்டு, பௌத்தம் தொடர்பிலான புத்தகங்களை அச்சிட்டு, மக்களுக்கு விநியோகித்தார். எனினும், இன்றைய நிலையில் காவியுடைக்கான துணியைக்கூட, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், தலதாமாளிகையின் முன்பாக உள்ளி வீதியானது, எங்களுடைய யுகத்தில்தான் மூடப்பட்டது. எங்களுக்கு தெரியும். பொதுமக்கள் சுமார் 4 அல்லது 5 கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்கின்றனர்.
இறைச்சிக் கடைலொறிகள், பஸ்கள் உள்ளிட்ட சகல வாகனங்களும் தலாமாளிகைக்கு முன்பாகவே பயணிக்கின்றன. ஆகையினால்தான், புலிப் பயங்கரவாதிகள், தலதாமாளிகையின் மீது, தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தினர்.
இந்நிலையில், தலதாமாளிகைக்கு முன்பாக உள்ள வீதியை, மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாங்கள், கூறுகின்றோம் தலதாமாளிகைக்கு முன்பாக உள்ள வீதியை திறக்கவேண்டாம். இந்த வீதியை திறப்பதற்கு எதிராக முஸ்லிம் உறுப்பினரே முதலாவதாக, எதிர்ப்பு தெரிவித்தார். அவரிடம் இருந்த பௌத்த உணர்வுகூட, பௌத்தர்களிடம் இல்லை. ஆகையால், இந்த விவகாரத்திலாவது பௌத்தர்கள் ஒன்றிணையவேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .