2026 ஜனவரி 03, சனிக்கிழமை

ஆஸி அமைச்சர் வடக்குக்குச் செல்வார்

Gavitha   / 2017 ஏப்ரல் 03 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ், மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (04) வருகைதரவுள்ளார்.

அவர், ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறான தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

  2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.  இதைப் பார்வையிட அமைச்சர் வட மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இலங்கை, அவுஸ்திரேலியாவின் நீண்ட காலப் பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பங்காளி. இந்தவருடம் இருநாடுகளும் 70 வருடகால அபிவிருத்தி ஒத்துழைப்பைக் கொண்டாடுகிறோம். அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான 80 மில்லியன் உதவித் திட்டம் புதிய கட்டத்தை அடைகிறது. இது தொழிற்றிறனை அபிவிருத்தி செய்தல், சிறிய வர்த்தகத்துக்கான சந்தை நிலைமைகளை உருவாக்குதல் என்பனவற்றுக்கு முக்கியத்தும் அளிப்பதோடு, பொருளாதார சீர்திருத்தத்துக்கும், தொழில் புரியும் மகளிருக்கு வலுவூட்டும் முகமாக வணிகம் மற்றும் பொருளாதார வாய்புகளை உருவாக்கும்.  அவுஸ்திரேலிய அமைச்சர் ‘தொழில் புரியும் மாதர்’ என்ற தொனிப்பொருளிலான 15 பில்லியன் டொலர்களை நான்குவருடத் திட்டத்ததை ஆரம்பித்து வைப்பார். 

இது, இலங்கை மாதர்களுக்கு மேலதிக மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புக்கள் உருவாக்க மற்றும் தொழிற்றுறை வாய்ப்புகளை உருவாக்கவென இலங்கை வர்த்தகத் துறையுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறது. 

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கென அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து புலமைப் பரிசில்களைப் பெற்ற மாணவர்கள் ஆயிரம் பேரை அமைச்சர் சந்திக்கவிருக்கின்றார் என்று, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X