Kogilavani / 2017 ஏப்ரல் 04 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து சரணாலயத்தில் வைத்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, அன்டனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியலும், மே மாதம் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மெசெய்ல் பிரிவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானது என்றும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் அறிவித்தார்.
இந்த வழக்கு, நேற்று (04) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.
இதேவேளை, இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான, புலிகள் அமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம், சட்டரீதியானது என, கம்பஹா மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதி மற்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் ஆகியோர், 2017 மார்ச் மாதம் 06ஆம் திகதியன்று அறிவித்திருந்தனர்.
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதியன்று தீர்மானிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்துகொண்டிருந்த அன்டனோவ்-32, வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மெசெய்ல் (எறிகணை) தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதனால், ரஷ்ய விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எறிகணை படையணியின் உறுப்பினர்களாவர். இருவரினம் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .