2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஜனாதிபதிக்குக் காலம் வழங்கிய சோதிடரை என்ன செய்வது?

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறிப்பிட்ட ஒரு திகதியில் இறப்பார் என எதிர்வுகூறி, தவறான உணர்வுகளைக் கட்டியெழுப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சோதிடரான விஜித ரோஹன விஜயமுனி தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி, சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கான அடுத்த திகதியாக, ஓகஸ்ட் 1ஆம் திகதியை, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார குறித்தார்.

தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120ஆவது பிரிவின் கீழும் கணினிக் குற்றச் சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டு, சந்தேகநபர், ஜனவரி 31ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 26ஆம் திகதி உயிரிழப்பார் என எதிர்வுகூறும் காணொளியொன்றைப் பகிர்ந்திருந்த அவர், பின்னர், இன்னொரு திகதியை அறிவித்து, மற்றுமொரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். இது, பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த சந்தேகநபர், முன்னாள் கடற்படை அதிகாரி என்பதோடு, இந்தோ - லங்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக, 1989ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த, இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .