2026 மார்ச் 07, சனிக்கிழமை

சீன உயர் அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன உயர் அரசியல் ஆலோசகர் யூ ஸெங்செங், நேற்று முதல் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் செல்லவுள்ளாரென, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின், தேசியக் குழுவின் தவிசாளராக உள்ள ஆலோசகர் யூ ஸெங்செங், இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாகிஸ்தான் மேல் சபைத் தலைவர் மியன் ரஸ நபானி ஆகியோரின் அழைப்பின் பேரில், இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .