Princiya Dixci / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதி, பிரமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல், அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளையே தமிழ் அமைச்சர்கள் மேற்கொள்கின்றனர் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்றைய நல்லாட்சியில் எந்தவிதமான நல்ல விடயங்களும் தமிழ் மக்களுக்கு நடப்பதாக தெரியவில்லை என்றும் அந்த காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளரான என்.ரவிகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோரை கண்டுபிடிப்பது, மக்களது காணிகளை அவர்களுக்கு கையளிக்காமை, அத்துடன் மலையக மக்களது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணாமை. மேல் மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் அபிவிருத்தி நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், தமிழ் அமைச்சர்கள் தொடர்ச்சியாக மௌனம் காத்துவருகின்றனர்.
முன்னைய ஆட்சியை விமர்சித்தவர்கள் அப்பொழுதிருந்த தமிழ் அமைச்சர்கள், எம்.பிக்களை ஏளனமாக பேசியவர்கள், இன்று நல்லாட்சி என்று கூறிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முன்னர் போராட்டத்தை ஏற்பாடு செய்து தலைமை தாங்கியவர்கள் இன்று மக்கள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் அழையா விருந்தாளிகளாக கலந்து கொண்டு ஊடகங்களில் காட்சி பொருளாக காட்சி அளிக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .