2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

‘வழிமறித்தவரை விட்டு விடுங்கள்’

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய உத்தியோகபூர்வ வாகனத்துக்கு, அவருடைய காரின் மூலமாக வெட்டுப்போட்டுவிட்டு, வழிமறித்து ஓட்டிச்சென்ற சாரதியிடம், இனிமேல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.  

இவ்வாறு ‘வெட்டுப் போட்டு’ காரை ஓட்டியவர், சீனாவில் வைத்திய பீடத்தில் கல்விபயிலும் இலங்கை மாணவன் என்றும் அவர் தவறான முறையில், காரை செலுத்தவில்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.  

கடந்த 6ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலிருந்து சுதந்திர சதுக்கத்துக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ காரில் பயணித்துகொண்டிருந்த போதே, ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து, குறித்தநபர் வாகனத்தை வழிமறித்து பயணித்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்தக் காரை கைப்பற்றியதுடன், காரின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு, அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்.  

இந்நிலையிலேயே, அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X