2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

‘தஹம்’ பரீட்சைக்கு 39 கைதிகள் தோற்றினர்

Gavitha   / 2017 ஏப்ரல் 10 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 39 பேர், தஹம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தஹம் பாடசாலை இறுதி சான்றிழதழ்ப் பரீட்சை 2016-2017, மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.  

இந்தப் பரீட்சைக்கு தோற்றிய கைதிகள், சிறை செல்வதற்கு முன்னர் ஒருநாளேனும், பாடசாலைக்குச் சென்றதில்லை என்றும் அறியமுடிகிறது.  

தஹம் பாடசாலை இறுதி சான்றிதழ் பரீட்சையில் இவர்கள் சித்தியெய்தினால், தர்மாசார்ய பரீட்சையில் தோற்றுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று, வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 

இதேவேளை, நீண்டகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 500 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தஹம் பாடசாலையில் கல்விப் பயின்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இவர்களில், எழுத்த தெரியாத 50பேர் இருந்தனர் என்றும், அவர்கள் தற்போது, கடிதம் எழுதும் திறமையை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தஹம் பாடசாலையில் கற்பிக்கும் நடவடிக்கையில், தலைமை தேரர் உள்ளிட்ட ஆசிரியர்கள் எட்டுபேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .