Princiya Dixci / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தின் போது குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தேடுப் பணியில் தொடர்ந்தும் இன்றும் (16) மீட்புக் குழுவினர், தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .