Princiya Dixci / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான இன்று (16), தனது 77 ஆவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில், நாட்டில் இடம் பெற்ற போர் தொடர்பில், சர்வதேசத்தைத் திசை திருப்பச் செய்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைப் பறை சாற்றியவராவார்.
மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகாகவும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .