Princiya Dixci / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை உள்ளடங்கலாக வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை திங்கட்கிழமை (17) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.
இதேவேளை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் உரிய பதிலை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், படைகளின் வசமிருக்கின்ற பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை, நாளை (17) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .