2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

'சி.வி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்'

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த  குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட  பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் அவரை  கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால், 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்துக்கும் பொதுவானதொரு பதவியாகும். அவ்வாறு இருக்கின்ற போது, வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இயேசுக் கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • S.P.Jesuthasan Monday, 21 August 2017 03:45 PM

    இயேசு கிறிஸ்துவை விமர்சித்து "2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்றும் அவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால், 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை" என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகத்துக்கு இப்படி பேட்டியளித்தார் என்பது உண்மையா ?????????????????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X