2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன ரீதியான கல்வி வலயங்களை ஒழிப்பதற்கு தீர்மானம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 20 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

பிரதேச கோட்டக் கல்வி அலுவலக முறைமையையும் இன ரீதியான கல்வி வலயங்களையும் முற்றாக ஒழிப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும், அதனை தமது சங்கம் வரவேற்பதாகவும், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பில், இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாடளாவிய ரீதியில் கல்வி அலுவலக நடைமுறையை மறுசீரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

“இதன்பிரகாரம், நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற 330 பிரதேச கல்விக் கோட்டங்களும், ஒழிக்கப்படவுள்ளன. அதேவேளை, தலா மூன்று பிரதேச கல்விக் கோட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஆகக் குறைந்தது ஐம்பது பாடசாலைகளை உள்ளடக்கியதாக, வலயக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

“இத்திட்டத்தின் படி, வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை, 150 இலிருந்து சுமார் 200 வரை அதிகரிக்கப்படவுள்ளன.

“இந்த கல்வி அலுவலக மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இன ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் யாவும் ஒழிக்கப்பட்டு, மொழி ரீதியான கல்வி வலயங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

“அத்துடன், 1993ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த வட்டாரக் கல்வி அதிகாரி முறைமையும், இந்த மறுசீரமைப்பின் ஊடாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .