2026 ஜனவரி 14, புதன்கிழமை

யாழ் தேவியில் மோதி ஒருவர் பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், க.அகரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ் தேவி ரயிலுடன் மோதுண்டு  குடும்பஸ்தர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக, பண்டாரிக்குளம் வீதியை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோதே, அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்த வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .