Kogilavani / 2017 ஏப்ரல் 23 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகொடியை ஏந்தியவாறு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்துகொண்டும் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார்.
“ஓம் நமச்சிவாய” என, உச்சரிக்ககூடாது என்றும், சிவகொடியை ஏந்திச்செல்லக் கூடாது என்றும் அந்த இனந்தெரிதோர், அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, ஹட்டன்-குடாஓயா சர்வோதய கேட்போர் கூடத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (23) நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில், “யாழ்பாணம்- நல்லூரிலிருந்து, சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக, சிறுவர்கள், பெண்கள் அடங்களாக 45 யாத்திரிகள் கடந்த 22ஆம் திகதியன்று சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர்.
அவ்வாறு மலைக்கு சென்றவர்கள், சிவகொடியை கையில் ஏந்தியிருந்தனர். அத்துடன், ஒம் நமச்சிவாய என்ற நாமத்தையும் உச்சரித்துகொண்டே சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை இடைமறித்த இனந்தெரியாத சிலர், இந்தக் கொடியைக் கொண்டுச்செல்லக் கூடாது என்றும், மந்திரத்தை ஓதவேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .