2024 மே 08, புதன்கிழமை

கல்குடாவில் எத்தனோல் மதுபான நிலையம்; த.தே.கூ அரசியல்வாதிகளுக்கு தெளிவூட்டல்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கல்குடாப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எத்தனோல்; மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு தெளிவூட்டும் கூட்டம் மிக இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில்  ஞாயிற்றுக்கிழமை (23) இரவு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராஜா ஆகியோருடன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மேற்படி நூலகத்தின் யன்னல் கதவுகள் மூடப்பட்டு, தெளிவூட்டும் கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இதில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எத்தனோல் மதுபான உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் கருத்துரை வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

மேற்படி மதுபான  உற்பத்தி நிலையத்தின் துறைசார் நிபுணர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் முதலீட்டாளர்களை அழைத்து சில நிபந்தனைகளை வைக்கலாம் எனவும்  ஆலோசித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இந்த மதுபான உற்பத்தி நிலையம்  அமைக்கப்படுவதன் சாதக, பாதக நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டதே தவிர, அதனை அமைப்பதற்கான உறுதிமொழி எதுவும் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரனும் சீ.யோகேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்குடாவில் எத்தனோல்; மதுபான உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை நிறுத்துமாறு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுக்கும் நிலையில், அந்த நிலையம்  அமைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் மட்டக்களப்பிலுள்ள 'நிபுணர்கள் அமைப்பு' எனும் பெயர் கொண்ட அந்த அமைப்பு இப்பணியை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X