2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மட்டக்களப்பில் சுமார் 2 இலட்சம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளதுடன்,  இவர்களில்; 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவாக உள்ளதாகவும் அம்மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஆரையம்பதியிலுள்ள உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்துக்குப் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, தாழங்குடாக் கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் இன்று (24) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

தற்போது நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்சினையானது  பட்டதாரிகளுக்கு மாத்திரமன்று எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 4,500 பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றனர்' எனவும் கூறினார்.

மேலும், இந்த வருடத்தில் கிழக்குப்  பல்கலைக்கழகத்திலிருந்து 1,600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறவுள்ளனர். இவ்வாறு அதிகளவான பட்டதாரிகள் வெளியேறினால், அவர்களுக்கு எவ்வாறு  வேலைவாய்ப்புகளை வழங்குவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 2,500 பட்டதாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்கச் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று தற்போது  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வித்தகுதி என்பது வேறு. தொழில் தகுதி என்பது வேறு. கல்வித் தகுதியானது எமது பெயருக்குப் பின்னால் அழகு பார்க்கும் பட்டங்களாகும். தொழிற்கல்வி என்பது தொழில் செய்வதற்கு எங்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளும் விடயமாகும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .