2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் 45 பேர் பணியிலிருந்து நீக்கம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி நகர சபையில் கடமையாற்றிவந்த  ஊழியர்கள் 45 பேர், கடந்த 13ஆம் திகதி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என நகர சபைச் செயலாளர் எம்.எஸ்.எம்.சபீ, இன்று தெரிவித்தார்.  

அரசியல் செல்வாக்குடனும் சட்டவிரோதமான முறையில் நியமனங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் மேற்படி 45 ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

கடந்த 12 முதல் 18 மாதங்கள்வரை காத்தான்குடி நகர சபையில் ஊழியர்களாக இவர்கள் கடமையாற்றி வந்துள்ளனர் எனத் தெரிவித்த அவர்,  அக்காலப்பகுதியில் இவர்களின் சம்பளத்துக்காக மாத்திரம் காத்தான்குடி நகர  சபையின் நிதியிலிருந்து சுமார் 150 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது எனவும் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .