2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய அதிபருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அகரன்

செட்டிகுளம் மகா வித்தியாலயத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிபருக்க எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் பாடசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“கடந்த 4 வருடங்களுக்கு மேலாக, செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தால் பாடசாலை, கல்வி மற்றும் பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ளது.

இந்நிலையில், புதிய அதிபராக நித்தியானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே கடமையாற்றி பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்” எனவே அவரது நியமனத்தை எதிர்க்கின்றோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

“குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும். அதற்கான தகுதி தனக்கு இருக்கும் நிலையிலும் நியமனம் வழங்கப்படவில்லை”என, செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள், பாடசாலைக்கு செல்லாது பாடசாலை முன்பாக பெற்றோர், பழைய மாணவர்களுடன் இணைந்து பேரராடி வருகின்றனர்.

தமக்கு, பழைய அதிபர் அல்லது வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறும் தற்போது நியமிக்கப்பட்டவர் தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்தே, குறித்த போராட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்களை செய்து வருவதால் தமது கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கும் மாணவர்கள், கல்வித் திணைக்களம் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .