Gavitha / 2017 மே 01 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இரண்டு வெசாக் பௌர்ணமி -களுக்குள், இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
2 வெசாக் பௌர்ணமிகள் அல்ல, 20 வெசாக் பௌர்ணமிகள் வந்தாலும், ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு வர, நாம் ஒருபோதும் இடமளியோம்” என, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
“ராஜபக்ஷக்களின் பௌர்ணமி கதைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இரு பௌர்ணமி தினங்களுக்குள் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றவர்கள், இப்போது, இரு வெசாக் பௌர்ணமி கதைகள் பற்றிப் பேசுகிறார்கள். இனி உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது என்பதை உறுதிப்படக் கூறுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமயவின் மே தினப் பேரணி, நடைபாதை வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள் உட்பட பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சினைகளைப் பற்றிக் கவனஞ்செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பும் அதன் புறநகர்ப் பகுதிகளும், அழகுபடுத்தப்பட்டுள்ள போதிலும், புறக்கோட்டையிலும் கோட்டையிலும் வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கை, பிரித்தானியக் காலத்தின் பின்னர் மாற்றமடையவில்லை என்று தெரிவித்தார். அத்தோடு, கோட்டையிலும் புறக்கோட்டையிலும் வாழும் 1,500 குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்குக் காப்புறுதித் திட்டங்களை, ஜாதிக ஹெல உறுமய வழங்குமெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .