Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணிக் கட்சியை யாருக்கும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை.
ஈரோஸ் கட்சிக்கு தெருவழிப் போக்கர்கள் ஒரு நாளும் சொந்தம் கொண்டாட முடியாது என அக்கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
ஆரையம்பதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ஈரோஸ் கட்சி பல தமிழ் இளைஞர்களின் தியாகத்தினால் உருவாகி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியாகும்.
இக்கட்சியின் செயலாளர் பதவியில் நானே இருக்கின்றேன். வேறு எவராவது இந்தக் கட்சிக்கு செயலாளர் பதவியை சொந்தமெனக் கூறினால் அதற்கு அருகதையற்றவர்கள்.
என்னை இக்கட்சியிலிருந்து விலக்குவதாயினும் அல்லது நான் விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும் சரி, எமது கட்சிக்கு என மத்திய குழுவும் பொதுக் குழுவும் இருக்கின்றன. அக்குழுக்கள் கூடி முடிவெடுத்து அதன் பிரகாரம்தான் பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்படும்.
அதைவிடுத்து, ஒரு நாளும் புறம்பாக தனி நபருக்கு தனிப்பட்ட முறையில் கட்சியை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது’ என்றார்.
‘தமிழ் மக்களுக்கான தீர்வு சம்பந்தமாக பேசுவதற்காக நான் இந்தியாவுக்கு சென்றிருந்ததால், நாட்டில் சில நாட்கள் இல்லை. இலங்கையில் ஏனைய மாவட்டங்களுக்கும் சென்றிருந்தேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .