George / 2017 மே 06 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் விபசார விடுதியை நடத்திச் செல்ல உதவி செய்த தாய்லாந்து பெண்கள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளையில் ஆயுர்வேத வைத்திய நிலையம் நடத்துவதாக கூறி, இந்த விபசார விடுதி நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
விடுதியின் முகாமையாளர், உதவியாளர்களான ஆண்கள் இருவர், தாய்லாந்து பெண்கள் இருவர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்களான 8 பெண்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 22 வயது முதல் 37 வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் கொழும்பு, உக்குவலை, குளியாப்பிட்டிய, கம்பஹா, பொலனறுவை, ரிதிகம, கல்கமுவ மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .