2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து

Menaka Mookandi   / 2017 மே 08 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X