2024 மே 03, வெள்ளிக்கிழமை

சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி

Menaka Mookandi   / 2017 மே 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரீ, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எமது நாட்டு மக்களுக்கு உதவ முன்வருகின்றவர்களை, பல தரப்பட்ட அறிக்கைகளை விடுத்து, அவர்களின் மன உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்.

எமது இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய தகுதியுடைய நாடு இந்தியா மட்டுமே. ஆகவே, இறுதித் தீர்வு ஏற்படும்வரை அதனுடைய செயற்பாட்டில் எவரும் தலையிடக்கூடாது.
குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்து எவரையும் சங்கடத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை.

ஆகவே தான், எந்த விடயத்தையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், மக்கள் உங்களிடமிருந்து எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்களென நம்புகிறேன்' என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .