Niroshini / 2017 மே 09 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக விஜயத்தை முன்னிட்டு, இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒத்திகைபார்த்து, ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) இறங்கியமையால், மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகளில், 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த இரண்டு ஹெலிகள், மைதானத்தில் தரையிறங்கும் போது, வீடுகளின் மேலாக மிகவும் தாழ்வாக பறந்தமையால், விசிறிகளிலிருந்து வெளியேறிய அதிக அழுத்தத்தைக் கொண்ட காற்றினால், குறிப்பிட்ட 5 வீடுகளின் கூரைகளும் சிறிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .