Menaka Mookandi / 2017 மே 12 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் இலாபத்தை, இலங்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாள பொருளாதார ஒத்துழைப்பு, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதென்றும் கூறினார்.
சர்வதேச வெசாக் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர் மோடி, 'அசோக்க சாம்ராஜ்ஜியத்தின் மிஹிந்து தேரரைப் போன்றே, சங்கமித்தா தேர்த்தியும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டுவந்தனர். இதற்கமைய, பௌத்தத்தின் கேந்திர நிலையமாக, இலங்கை தற்போது விளங்குகின்றது' என்றார்.
'பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு, நூற்றுக்கணக்காண ஆண்டுகளைக் கடந்ததாகும். இந்நிலையில், இந்தியாவின் விமானச்சேவை நிறுவனம், கொழும்புக்கும் இந்தியாவின் வாரணாசிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
'அதன் மூலம், பௌத்த மற்றும் ஹிந்து மதங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பெரும் பயனை அடைய முடியும்' என, இந்தியப் பிரதமர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .