Menaka Mookandi / 2017 மே 12 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான கலந்துரையாடலொன்று தொடர்பில், இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நரஞ்சித் சிங் சந்து தெரிவித்தார்.
நேற்று (11) மாலை, கங்காரம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப் போசன விருந்துபசாரத்தை அடுத்தே, மஹிந்தவுடனான இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியல் ஜீ.எல்.பீரிஸும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .