Yuganthini / 2017 மே 14 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
“அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருட இறுதிக்குள், நிச்சயம் ஆட்சி மாற்றம் எற்படும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும், “கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்தாலும், 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம், ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் நேற்று (13) மாலை நடைபெற்ற கலாசார விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .