2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த-சுஜீவ சந்தித்தனர்

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது.   

ராஜபக்ஷவின் இளம் சகோதரி மரணமடைந்ததையடுத்து இடம்பெற்ற ஏழாம்நாள் மதவழிபாடுகளில் பங்கேற்பதற்கே, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, அங்கு வருகைதந்திருந்தார்.   

அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் நீண்டநேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அவர், அவ்வீட்டிலிருந்து நீண்ட நேரத்துக்கு பின்னரே வெளியேறியுள்ளார் என்று அறியமுடிகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X