2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அம்மாவைச் சந்திக்க வேண்டும்’:முருகன் இன்று மனுத்தாக்கல்

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன், தனது தாயாரைச் சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (15) மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.  

முருகனின் சார்பில், அம்மனுவைத் தானே தாக்கல் செய்யவுள்ளதாக, அவருடைய வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

வேலூர் மத்திய சிறையில், முருகன் சிறை வைக்கப்பட்டுள்ள அறையை, பொலிஸார் அண்மையில் சோதனை செய்திருந்தனர். இதன்போது, விலையுயர்ந்த இரண்டு அலைபேசிகள், சார்ஜர் மற்றும் சிம் அட்டைகள் போன்றவை மீட்கப்பட்டன.   

இதையடுத்து, அவருடைய மனைவியான நளினி உள்ளிட்ட யாரையும், மூன்று மாதங்களுக்கு சந்திப்பதற்கு, முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   

இதற்கிடையில், முருகனிடம் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை, வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.   

இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனைப் பார்க்க, இங்கிருந்து (இலங்கை) சென்ற, முருகனின் தாயார் சோமணிக்கு, பொலிஸார் அனுமதி அளித்திருக்கவில்லை.   

இந்நிலையில், சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோரை, சனிக்கிழமை (13) சந்தித்துப் பேசிய வழக்குரைஞர் புகழேந்தி: “சிறையில் உள்ள முருகனை அவரது தாயார் சந்திக்க முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டது.  

 “முருகனின் தாயார் சோமணி, மே 29ஆம் திகதி, இலங்கை செல்ல வேண்டும் என்பதால், அவரைச் சந்திக்க அனுமதியளிக்கக் கோரி, திங்கட்கிழமை (15), சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளேன்” என்று தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X